டிகிரி படித்தவர்களுக்கு காத்திருக்கிறது இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம் !

By Raghupati R  |  First Published Aug 3, 2022, 5:54 PM IST

இந்தியன் வங்கி தற்போது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.


மத்திய அரசின் கீழ் இந்தியன் வங்கியில் Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் Indian Bank Jobs 2022 அறிவித்த பதவிக்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Consultant பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  08.08.2022 ஆகிய தேதி வரை  இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Management பாடப்பிரிவில் IT, B.E, B.Tech, MCA அல்லது Master Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

மேலும் செய்திகளுக்கு..MS Office தெரிந்தால் போதும்.. உங்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசு வேலை..!

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Senior Level பணிகள் அல்லது Head Incharger பணியில் குறைந்தது 05 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

click me!