ஐடிஐ படித்தவர்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பில் பணியாற்ற வாய்ப்பு.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Published : Aug 03, 2022, 05:26 PM ISTUpdated : Aug 03, 2022, 05:37 PM IST
 ஐடிஐ படித்தவர்களுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பில் பணியாற்ற வாய்ப்பு.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சுருக்கம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. அத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 36 பணியிடங்கள் உள்ளன,  Apprenticesship பதவிகள் ஆகும், அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https:/www.drdo.gow.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: NEET Result : மாணவர்களே அலெர்ட்.. நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது தெரியுமா ?

இந்தப் பணிக்காக விண்ணப்பித்தவர்கள் ஏதாவது ஒரு பல்கலைக்  கழகத்தில் அல்லது நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளம்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று என்பதால் நேர்காணல் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும் என்றும், ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வக இயக்குனரால் அமைக்கப்பட்ட குழு ஆட்களைத் தேர்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TNPSC தேர்வர்களுக்கு அலெர்ட்.. வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உத்தேச விடைகள் !

https:/www.drdo.gow.in என்ற இந்த லிங்கில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும், விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும், பின்னர் director.dl@gow.in  என்ற இமெயிலுக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்ப வேண்டும் இதுதொடர்பான அறிவிப்புகளை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/DLJ_ITIadvt02082022.pdf
 

PREV
click me!

Recommended Stories

CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!
வந்தாச்சு SSC CHSL ஆன்சர் கீ! உடனே உங்க மார்க் என்னனு செக் பண்ணுங்க.. டைரக்ட் லிங்க் இதோ!