தேர்வுகளே அலர்ட்!! குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ வெளியீடு.. ஆட்சபனைகளை தெரிவிப்பது எப்படி..? முழு விவரம்..

By Thanalakshmi V  |  First Published Aug 3, 2022, 2:57 PM IST

சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ எனப்படும் உத்தேச விடைக் குறிப்பை  டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இதில் ஆட்சேபனை இருந்தால், வரும் 8ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 
 


தமிழகம் முழுவதும் ஜூலை 24 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4  தேர்வு நடைபெற்றது. காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வினை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். இதில் 81 இடங்கள் விளையாட்டு பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை என மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வு நடைபெற்றது.

மேலும் படிக்க:குரூப் 1 தேர்வில் மாஸ் காட்டிய பெண்கள்... 66 இடங்களில் 57 இடங்களில் பெண்களே வெற்றி!!

Tap to resize

Latest Videos

இந்த தேர்விற்கு கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 21.5 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 7,689 மையங்களில் நடைபெற்ற தேர்வு மையங்களில், சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

மேலும் படிக்க:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு... நாளை வெளியாகிறது தரவரிசை பட்டியல்!!

குரூப் 4 தேர்வுகளை முன்னிட்டு தேர்வு மையத்திற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுகள் https://www.tnpsc.gov.in/Tentative/Document/CCS4T_2022_OPT.pdf எனும் இணையதளத்தின் மூலம் ஆன்சர் கீ காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை, மறுப்பு இருந்தால், ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தேர்வர்கள் தங்களின் கருத்துகளை ஆன்லைன் மூலமாக மட்டுமே தெரிவிக்க முடியும் என்றும் கடிதம் அல்லது இ-மெயில் மூலம் அனுப்பப்படும் ஆட்சேபனைகள் கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்ட பிறகே, ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் வகையில் உள்ளது. அனுப்பப்படும் ஆட்சேபனைகளை, டிஎன்பிஎஸ்சி வல்லுநர் குழு கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் தவறுகள் இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படும். 

மேலும் படிக்க:காலியாக 1,089 அரசு பணியிடங்கள்.. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு.. எப்போது..? எப்படி விண்ணப்பிப்பது..?

click me!