சென்னையில் அஞ்சல் துறை வேலைவாய்ப்பு... 2,994 பணியிடங்கள்... தகுதித் தேர்வும் கிடையாது!

By SG Balan  |  First Published Aug 16, 2023, 8:46 PM IST

தபால் துறையின் தமிழ்நாடு மண்டலத்தில் சென்னையில் மட்டும் 607 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. தகுதித் தேர்வும் கிடையாது. 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தபால் துறையின் தமிழ்நாடு மண்டலத்தில் 2,994 கிராம அஞ்சல் ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 607 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

Latest Videos

இந்தக் காலிப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுபவர்கள். தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இந்த வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கும்.

சந்திரயான்-3 லேண்டர் கேமரா எடுத்த இன்னொரு புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!

காலிப் பணியிடங்கள்:

கிளை அஞ்சல் அதிகாரி, துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 2,944 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 607 பணியிடங்கள் இருக்கின்றன.

வயது வரம்பு:

18 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு பிரிவினருக்கு உரிய வயது வரம்பு தளர்வும் வழங்கப்படும்.

சம்பளம்:

கிளை அஞ்சல் அதிகாரி பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் கிடைக்கும். துணை கிளை அஞ்சல் அதிகாரி பணிக்கும், கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கும் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையும் ஊதியம் கொடுக்கப்படும்.

விஸ்வகர்மா திட்டத்தில் ஒரு லட்சம் கடன்! அதிகபட்ச வட்டியே 5% தான்! மத்திய அரசு அறிவிப்பு

பிற தகுதிகள்:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பைக், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.  ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும் என தபால்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுய தொழில் செய்துகொண்டிருப்பவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் வசிப்பவராக இருப்பது முக்கியம்.

தேர்வு முறை:

ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள்  தகுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலுக்குத் தேர்வானவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அஞ்சல் துறையின் www.indianpost.gov.in அல்லது https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினருக்கும் ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.100. மற்ற பிரிவினருக்கும், மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கும் கட்டணம் கிடையாது.

சென்னை மண்டல அஞ்சல் துறை வேலைவாய்ப்பு குறித்த அதிகாரபூர்வ வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த வேலைவாய்ப்பு கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள் - 23.08.2023

சுதந்திர தினத்தில் நாங்க தான் கொடி ஏத்துவோம்... கேரள பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு

click me!