பொள்ளாச்சியில் மேற்படிப்புக்கு பண உதவி தேவைப்படும் மாணவர்கள் வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 16) நடக்கும் கல்விக்கடன் மேளாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் மேளாவை பொள்ளாச்சியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 16) தமிழக அரசு நடத்த உள்ளது. பொள்ளாச்சி எம்பி கே. சண்முகசுந்தரம் தலைமையில் மேளாவுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்த கல்விக்கடன், மேளாவில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட பயணத்தை நேசிப்பவரா? உங்களுக்காகவே இந்திய ரயில்வே இயக்கும் டாப் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
இதுபற்றி பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கே. சண்முகசுந்தரம் கூறும்போது, “பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேளா நடைபெறும். கல்விக்கடன் கோரும் மாணவர்களுக்கான அரசு இணையதளமான வித்யா லட்சுமி இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்காக பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
கல்விக்கடன் மேளாவுக்கு வரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பதிவு செய்ய ஒரு பிரத்யேக பகுதி ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு உதவி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பல்வேறு வங்கிகளின் 40 ஸ்டால்கள் இடம்பெறும் இந்த கல்விக் கடன் மேளாவில் சுமார் 4,000 மாணவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம் தெரிவித்துள்ளார்.
"சாதிச் சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்களை வழங்க இ-சேவா மையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றும் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.
கடன் நெருக்கடியில் இருந்து சீக்கிரம் விடுபட செய்ய வேண்டும்? வல்லுநர்கள் சொல்லும் எளிய வழிமுறைகள்!