தேர்வர்களே அலர்ட்!! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் குறித்து வெளியான முக்கிய தகவல்..

By Thanalakshmi V  |  First Published Jul 11, 2022, 4:42 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வின் ஹால் டிக்கெட் இந்த வாரம் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளாது. மேலும்  TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2022 இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதும் வெளியாகவில்லை. \
 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வின் ஹால் டிக்கெட் இந்த வாரம் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளாது. மேலும்  TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2022 இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..

Tap to resize

Latest Videos

விண்ணப்பத்தாரர்கள் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் TNPSC குரூப் 4 அட்மிட் கார்டு 2022ஐ பதிவிறக்க செய்ய,  விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர் மற்றும் பதிவு எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம். தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 24 ஆம் தேதி TNPSC குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வானது தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு மையங்களில், ஆஃப்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..

தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதி அட்டையுடன், ஆதார் அட்டை உள்ளிட்ட எதாவது ஒரு அரசு அடையாள அட்டை ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு முடிவடையும். இதனிடையே அரசுத்துறை காலியாக உள்ள 7,138 பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த தேர்விற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடைசி நாளில் மட்டும் சுமார் 3 லட்சப் பேர் விண்ணப்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்படும் என்றும் அக்டோபரில் பணி ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் டிஎன்பிஎஸ்இ குரூப்4  ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர், விஏஓ, பில் கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி..

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி..?

1. tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. ”ஆன்லைன் சேவை”என்பதை கிளிக் செய்ய வேண்டும்

3. ”ஹால் டிக்கெட் பதிவிறக்கம்” என்பதை கிளிக் செய்யவும்

4:  பின்னர் வலதுப்பக்த்தில் கொடுக்கப்பட்டுள்ள ''Download Hall Ticket” என்பதைக் கிளிக் செய்யவும். 

5. 'TNPSC குரூப் 4 தேர்வு' இணைப்பை கிளிக் செய்யவும் 

6. உங்கள் பதிவு எண் மற்றும் தேவையான விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

click me!