நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க நீட் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு ஜூலை 17 ஆம் தேதி முதல் நாடு முழுக்க நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்-ஐ இன்று முதல் இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க: மாணவர்களே அலர்ட் !! எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர போறீங்களா..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விபரம்..
undefined
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த தேர்வில் கலந்து கொள்ள தமிழ் நாட்டில் இருந்து 1 லட்சத்து 42 ஆயிரம் விண்ணப்பித்து இருக்கின்றனர். நாடு முழுக்க நீட் தேர்வில் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மேலும் படிக்க:கவனத்திற்கு !! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..
நீட் தேர்வு ஆனது நாடு முழுக்க 546 நகரங்களில் இருக்கும் தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. இதே போன்று வெளி நாடுகளில் 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெற இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது. நீட் தேர்வுக்கான யுஜி 2022 நுழைவு சீட்டை அதிகாரப்பூர்வ வலைதளம் - neet.nta.nic.in மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
நீட் யுஜி 2022 தேர்வு தேதி மற்றும் நேரம்
2022 கல்வி ஆண்டின் படி நீட் யுஜி 2022 தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுக்க 546 நகரங்கள், வெளி நாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. நீட் தேர்வு மதியம் 2.00 மணிக்கு துவங்கி மாலை 5.20 மணி வரை நடத்தப்படும்.
நீட் யுஜி 2022 ஹால் டிக்கெட்-ஐ டவுன்லோட் செய்வது எப்படி?
- முதலில் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை neet.nta.nic.in அதிகாரப்பூர்வ வலைதளம் செல்ல வேண்டும்
- முகப்பு பக்கத்தில் Download Neet UG 2022 Admit Car 2022 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்
- புதிய வலைப்பக்கம் திறக்கும்
- விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்
- நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்
- அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து கொண்டு எதிர்கால குறிப்புகளுக்காக ப்ரிண்ட்-அவுட் எடுக்க வேண்டும்