மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

By Raghupati R  |  First Published Aug 8, 2022, 7:01 PM IST

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. 


மாணவர்களிடம் தமிழ்மொழி அறிவை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவு தேர்வு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். 

 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறிவுத் தேர்வுக்கு தமிழ் தெரிந்த அனைவரும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in வழியாக ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேர்வு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு மரணம்.. பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை !

மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்டம்பர் மாதம் 9ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது 10ம் வகுப்பு தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“ஆட்சிக்கு வந்து 15 மாசம் ஆச்சு.. ஒன்னும் செய்யல !” - திமுகவை டாராக கிழித்த அண்ணாமலை !

click me!