ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியாகின.. 24 பேர் 100 % மதிப்பெண் பெற்று முதலிடம்..

By Thanalakshmi V  |  First Published Aug 8, 2022, 12:44 PM IST

பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ மெயின் தேர்வு முதல் தாள் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
 


தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  https://jeemain.nta.nic.in/ எனும் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்

தேர்வு முடிவுகளைப் பெற மாணவர்கள் விண்ணப்ப படிவ எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவிட்டு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.  

Tap to resize

Latest Videos

இந்த தேர்வில் 24 பேர் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 5 தேர்வர்களின்  முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் படிக்க:கவனத்திற்கு.. முக்கிய செய்தி !! பொறியியல் கலந்தாய்வு எப்போது.? உயர்கல்வித்துறை புதிய தகவல்
 

click me!