பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC)ஆனது காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC)
காலி பணியிடங்கள்: 13
பணியின் பெயர்: Contractual Specialist மற்றும் Senior Resident
பணியின் விவரம்: Full Time / Part Time
Contractual Specialist – 7 பணியிடங்கள்
Senior Resident – 6 பணியிடங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தமிழ்நாடு காவல்துறையில் அருமையான வேலைவாய்ப்பு.!
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கொண்டு நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டும்.
கல்வி தகுதி:
Contractual Specialist - விண்ணப்பத்தாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / Diploma பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Resident - விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree / Diploma /MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Contractual Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 70 ஆக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல் Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Full Time Contractual Specialist பணிக்கு மாதம் ரூ.1,16,174 சம்பளமாக வழங்கப்படும். Part Time Contractual Specialist பணிக்கு மாதம் ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் முறையில் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:மத்திய அரசு ஊழியர்களின் 4 % அகவிலைப்படி உயர்வு.. அறிவிப்பு எப்போது வெளியாகும்..? முக்கிய தகவல்