Job Vacancy: இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது! டிகிரி முடிச்சவங்களுக்கு கோவையில் மத்திய அரசு பணி.! மிஸ் பண்ணிடாதீங்க!

Published : Dec 31, 2025, 10:37 AM IST
Job vacancy

சுருக்கம்

கோவை சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பேராசிரியர், ஆய்வக மேற்பார்வையாளர், கற்பித்தல் அல்லாத பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் SVPISTM கல்லூரியில் பேராசிரியர் மற்றும் இதர பணி அறிவிப்பு! 

இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் (SVPISTM) பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரம் 

இந்த அறிவிப்பின்படி, கற்பித்தல் (Teaching) மற்றும் கற்பித்தல் அல்லாத (Non-Teaching) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்துப் பணியிடங்களும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் (Contractual Basis) நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்களின் விவரங்கள்

1. கற்பித்தல் பணியிடங்கள்

உதவி பேராசிரியர் (Assistant Professor): 03 காலியிடங்கள் 

(மேலாண்மை, பிசினஸ் அனலிட்டிக்ஸ், மற்றும் ஜவுளி/ஆடை வடிவமைப்புத் துறைகளில் தலா ஒரு இடம்).

2. கற்பித்தல் அல்லாத தொழில்நுட்பப் பணிகள்

  • ஆய்வக மேற்பார்வையாளர் (Laboratory Supervisor): 03 காலியிடங்கள் (Textile, Apparel, மற்றும் IT துறைகள்).
  • தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant): 02 காலியிடங்கள் (Networking & Computer).
  • ஆய்வகத் தொழில்நுட்புநர் (Laboratory Technician): 01 காலியிடம்.

3. நிர்வாகம் மற்றும் இதர பணிகள்

  • கணக்கு அலுவலர் (Accounts Officer): 01 காலியிடம்.
  • இளநிலை அலுவலக உதவியாளர் (Junior Office Assistant): 02 காலியிடங்கள்.
  • சிவில் பொறியியல்: இளநிலை சிவில் இன்ஜினியர் (1) மற்றும் திட்டப் பொறியாளர் (1).
  • பெண்கள் விடுதி காப்பாளர்: 01 காலியிடம் (பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்).

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள இக்கல்லூரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (SVPISTM)

 1483, அவிநாசி ரோடு, பீளமேடு, கோயம்புத்தூர் - 641004.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2571675, 2592205 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஜவுளி மற்றும் மேலாண்மைத் துறை சார்ந்தவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Training: காய்கறி, பழங்கள் ஏற்றுமதி மூலம் லட்சங்களில் வருமானம்.! அரசு வழங்கும் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி.! தேதிய மறந்துடாதீங்க.!
Training: இது நிஜமாவே இளைஞர்களுக்கு ஜாக்பாட் தான்! சென்னையில் மென்பொருள் பயிற்சி! எப்போ தெரியுமா?