இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய கடற்படை Chargeman காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 372 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இந்திய கடற்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 372 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தேர்வு கிடையாது.. HAL நிறுவனத்தில் வேலை.. ஐடிஐ, டிகிரி படித்தவர்களுக்கு அரியவாய்ப்பு!
வயது வரம்பு : விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 25-க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது கணிதத்துடன் அறிவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக வாரியம் அல்லது பொருத்தமான துறையில் பொறியியல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் computer based exam மூலம் தேர்வு செய்யப்படுவ்ர்.
கடைசி தேதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே 29-ம் தேதி கடைசி தேதி ஆகும்
அதிகாரப்பு அறிவிப்பை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
இதையும் படிங்க : Breaking : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியாகும்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..