மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் தெரியுமா ? முழு விபரம் இதோ

By Raghupati R  |  First Published Dec 13, 2022, 4:43 PM IST

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன் படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

முதலில் இந்த தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பி.இ, பி.ஏ, பி.எஸ்.சி, எம்.ஏ, எம்.எஸ்.சி ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், பி.எட் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் சிடெட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சொன்ன நம்பமாட்டீங்க.. மாதம் ரூ.69,000 சம்பளம் .. 10, 12 முடித்தாலே போதும்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!

முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 நாடு முழுவதும் 311 நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வில் நடத்தப்படும்.

இந்த தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 31 அக்டோபர் முதல் 24 நவம்பர் 2022 வரை ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என்றும், தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் (ctet.nic.in) மூலமாக அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க;- ஆண்டுக்கு ரூ 19.50 லட்சம் சம்பளம்..? எஸ்.பி.ஐ வங்கியில் வேலை..! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா..? 

click me!