10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதும்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

Published : Dec 12, 2022, 05:04 PM IST
10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதும்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

சுருக்கம்

புதுச்சேரி அரசு தற்போது 165 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி : கிளார்க் 

காலியிடங்கள் : 165 

பணி : ஸ்டோர் கீப்பர் 

காலியிடங்கள் : 55

வயது வரம்பு : 29-12-2022 தேதியின்படி 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

இதையும் படிங்க;- ஆண்டுக்கு ரூ 19.50 லட்சம் சம்பளம்..? எஸ்.பி.ஐ வங்கியில் வேலை..! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா..? 

கல்வித் தகுதி :

கிளார்க் - பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஏதாவதொரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டோர் கீப்பர் - பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தகுதி உள்ளவர்கள் (https://recruitment.py.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-12-2022 ஆகும். மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க;- சொன்ன நம்பமாட்டீங்க.. மாதம் ரூ.69,000 சம்பளம் .. 10, 12 முடித்தாலே போதும்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு அதிகாரிகளுக்கு செம சான்ஸ்! சிபிஎஸ்இ-யில் கைநிறைய சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!
இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!