இந்திய தேசிய நெடுஞ்சாலை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மேலாளர் (நிர்வாகம்), உதவி மேலாளர் (சட்டம்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பதவிகள்:
- மேலாளர் (நிர்வாகம்) - 12 காலிப்பணியிடங்கள்
- மேலாளர் (சட்டம்) – 2 காலிப்பணியிடங்கள்
- உதவி மேலாளர் (சட்டம்) - 4 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி:
- இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி
பணி காலம்:
- இந்த வேலைவாய்ப்பு deputation பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலானது. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை பணிக்காலம், திறன் அடிப்படையிலும், நிரந்தர பணிக்கான தேவையின் அடிப்படையிலும் ஒப்பந்தகாலம் நீடிக்கப்படும்.
ஊதிய விவரம்:
- மேலாளர்(நிர்வாகம்) பணி - ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை/ மாதம்
- மேலாளர் (சட்டம்) பணி - ரூ. 15,600 முதல் ரூ.39,100 வரை/ மாதம்
- உதவி மேலாளர் பணி - ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரை/ மாதம்
வயது வரம்பு:
- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: 2022 இந்தியாவின் நூற்றாண்டு.. வென்சர் கேப்பிடலிஸ்ட் பிரெண்டன் ரோஜர்ஸ் கணிப்பு !
தேர்வு செய்யப்படும் முறை:
- மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
- https://www.nhai.gov.in -என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜன.19, 2023 மாலை 6 மணி வரை