தமிழ்நாடு பொது அறிவியல் பணியில் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பொது அறிவியல் பணியில் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையகரத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் (Junior Rehabilitation Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
பணி விவரம் :
இளநிலை மறுவாழ்வு அலுவலர்
மொத்தப் பணியிடங்கள் :
7
சம்பளம் :
ரூ.35,000 முதல் ரூ.1,30,800 வரை
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி:
உளவியல்/சமூகப்பணி/சமூகவியல் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 வருட அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு விவரங்கள்:
கணினி வழி எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் எழுத வேண்டும். இரண்டாம் தமிழில் தமிழ் வழி கட்டாய தேர்வு இடம்பெறும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
டிஎன்பிஎஸ்சி பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100 ஆனலைனில் செலுத்த வேண்டும். SC, SC(A), ST,DW மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வுக் கட்டணம் கிடையாது.
ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:
1.04.2023
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
07.01.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க :