தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் யுஜிசி-நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அறிவியல் அல்லது தொழில்நுட்பத் துறை சார்ந்த எதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
இதையும் படிங்க: அடித்தது ஜாக்பாட்.!! வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?
மேலும், நெட் தேர்வு நடைபெற்ற தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பட்டியலின மற்றும் இதர பின்படுத்தப்பட்ட வகுப்பு Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
நெட் தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. ஜேஆர்எப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும், பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு 01.04.2023 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.
பாடப்பிரிவுகள் :
1. Chemical Sciences
2. Earth, Atmospheric, Ocean and Planetary Sciences
3. Life Sciences
4. Mathematical Sciences
5. Physical Sciences
இந்த தேர்வு ஆனது ஜூன் மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். பொதுப்பிரிவினர் ரூ.1,100, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்கள் ரூ.550, பட்டியலினத்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.275. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் www.csirnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 10.04.2023 இதுவாகும். தேர்வர்களுக்கு மேலும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ரிசர்வ் வங்கியில் இருவேறு வேலைவாய்ப்புகள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!