ரிசர்வ் வங்கியில் இருவேறு வேலைவாய்ப்புகள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

By SG Balan  |  First Published Apr 3, 2023, 9:15 AM IST

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓட்டுநர் பணி:

Tap to resize

Latest Videos

குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இலகு ரக  வாகனம் (Light  motor vehicle) ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருப்பதும் அவசியம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநராகப் பணியாற்றிய அனுபவம்மு இருக்க வேண்டும். வாகனம் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வது (vehicle repair) தொடர்பாகவும் அனுபவம் வேண்டடும்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பணிபுரிய வேண்யிருக்கும் என்பதால், மராத்தி மொழியில் நன்கு பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம், இந்திகளிலும் சரளமாக பேசத் தெரிய வேண்டும்.

சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு... ரூ.1,50,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

01.03.2023 அன்று 28 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பழங்குடியினருக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்படுகிறது.

எழுத்துத் தேர்வு, வாகன ஓட்டும் திறன் தேர்வு ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறைந்தபட்சம் ரூ.17,270 முதல் அதிகபட்சமாக ரூ.37,770 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.450. பட்டியலின / பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டுமே.

விண்ணப்பிக்கும் முறை

இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து இந்தப் பணி வாய்ப்பு பற்றிய கூடுதல் தகவல்களை அறியலாம்.

Recruitment for the Post of Driver in Reserve Bank of India, Mumbai

விண்ணபிக்க கடைசி தேதி 16.04.2023.

அடித்தது ஜாக்பாட்! வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?

மருத்துவ உதவியாளர் பணி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவ உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பார்மசி துறையில் இளங்கலை பட்டம் (B. Pharm) பெற்றவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 மணிநேரம் வேலை செய்யவேண்டும். ஒரு மணிநேரத்திற்கு ரூ.400 வீதம் ஊதியம் வழங்கப்படும். பணித்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணிக்கும் https://www.rbi.org.in என்ற ஆர்பிஐ இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறியலாம்.

Engagement of Pharmacist in the Bank on contract basis with fixed hourly remuneration, Mumbai

விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2023

click me!