கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூத்த பொறியாளர், மூத்த அதிகாரி மற்றும் அதிகாரி பதவிகளுக்கு 261 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 11, 2024 க்குள் gailonline.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொறியாளர் மற்றும் இதர பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் GAIL India Limited இன் அதிகாரப்பூர்வ இணையதளமான gailonline.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் மொத்தம் 261 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
இந்த காலிப்பணியிடங்களுக்கான பதிவுச் செயல்முறை நவம்பர் 12, 2024 அன்று தொடங்கியது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 11, 2024 ஆகும்.
Job: பழனி முருகன் கோயிலில் வேலை; தமிழ் தெரிந்தால் போதும்; 296 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?
காலியிட விவரங்கள்
undefined
மூத்த பொறியாளர்: 98 பணியிடங்கள்
மூத்த அதிகாரி: 130 பணியிடங்கள்
அதிகாரி: 33 பணியிடங்கள்
தகுதி
இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, வேட்பாளர்கள் ஒற்றை-நிலை அல்லது பல-நிலை தேர்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். குழு விவாதம் மற்றும்/அல்லது தேர்வுக் குழுவின் முன் நேர்காணல் நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மூத்த அதிகாரி (F&S), அதிகாரி (பாதுகாப்பு) மற்றும் அதிகாரி (அதிகாரப்பூர்வ மொழி) தவிர அனைத்து பதவிகளுக்கும் தேர்வு செயல்முறை ஒரே மாதிரியாக இருக்கும். நேர்காணலில் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி சதவீதம் UR/OBC/EWS வகை விண்ணப்பதாரர்கள் 60% ஆகும். SC/ST/PwBD பிரிவினருக்கு 55%. ஆகும்
குழு விவாதம்/நிபுணத்துவத் தேர்வு/உடல் தகுதித் தேர்வு (பொருந்தக்கூடிய இடங்களில்) அல்லது திறன் மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேறு ஏதேனும் கருவிகளில் பெறப்பட வேண்டிய மதிப்பெண்களின் குறைந்தபட்ச தகுதி சதவீதம் UR/OBC(NCL)/EWS 40% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST/PwBD வேட்பாளர்களுக்கு 35% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் வேலைவாய்ப்பு 2024 ; விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
விண்ணப்பக் கட்டணம்
UR/EWS/OBC (NCL) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் திருப்பிச் செலுத்தப்படாத விண்ணப்பக் கட்டணமாக ₹ 200/- (பொருந்தக்கூடிய வசதிக் கட்டணம் மற்றும் வரிகளைத் தவிர்த்து) செலுத்த வேண்டும். SC/ ST/PwBD வகை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், Paytm, Wallet & UPI மூலம் ஆன்லைன் முறையில் கட்டணத்தைச் செலுத்தலாம்.
சம்பளம் :
சீனியர் இன்ஜினியர் பதவிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
சீனியர் அதிகாரி பதவிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
அதிகாரி பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த காலியிடங்களுக்கு நேரடியாக விண்ணப்பதற்கான லிங்க்