ரூ.31,500 வரை சம்பளம்! இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

By Ramya s  |  First Published Dec 5, 2024, 3:53 PM IST

தென்காசி முப்பிடாதியம்மன் கோயில் மற்றும் சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது நிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள முப்பிடாதியம்மன் திருக்கோயில் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன

அதன்படி முப்பிடாதியம்மன் கோயிலில் உள்ள காலிப்பணியிடங்கள் நேரடி நியமன்ம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த கோயிலில் 1 சமையல் செய்பவர் காலியிடம் உள்ளது. 

Tap to resize

Latest Videos

தகுதி :

சமையல் செய்பவர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
50 வயதுக்கு மேற்பட்டவருக்கு சமையல் பணியில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.6,900 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும்.
இந்து மதத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும். 19.12.2024 வரை இந்த விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். 
உரிய தகுதி சான்றிதழ்களுடன் இணைத்து விண்ணப்பங்களை அனுப்பலாம். 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
துணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சங்கரநாராயணன் சாமி திருக்கோயில், 
சங்கரன் நகர்,
தென் காசி 

undefined

மேலும் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். 

NCERT வேலைவாய்ப்பு : மாதம் ரூ. 58,000 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் காலியிடங்கள்

இந்த கோயிலில் சுயம்பாகி, மின் பணியாளர், பகல் காவலர், திருவலகு ஆகிய பணிகளுக்கு தலா 1 காலியிடங்கள் உள்ளன. 

18 வயது மேற்பட்டவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 
சுயம்பாகி பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் பழக்கவழக்கத்தின் படி, பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.  திருக்கோயில் பூஜை மற்றும் திருவிழாக்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

மின் பணியாளர் பதவிக்கு ஐடிஐ படித்திருக்க வேண்டும்.  மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட பி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.பகல் காவலர் பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருவலகு பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

10 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் வேலைவாய்ப்பு.! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

சம்பளம் :

சுயம்பாகி பதவிக்கு ரூ.13,200 முதல் ரூ.41,800 வரையும், மின் பணியாளர் பதவிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரையும், பகல் காவலர் பதவிக்கு ரூ. 11,600 முதல் ரூ.36,800 வரையும் சம்பளம் வழங்கப்படும். திருவலகு பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை சம்பளம் வழங்கப்படும். 

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.12.2024 
 

click me!