CBSE : சிபிஎஸ்இ செய்முறை தேர்வுகள் தொடங்குவது எப்போது.? வெளியானது அறிவிப்பு!

By Raghupati RFirst Published Dec 28, 2022, 7:11 PM IST
Highlights

கல்வி ஆண்டு 2022 - 2023 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் ஜனவரி 2 2023 அன்று துவங்கவுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் துவங்கும் தேர்வுகள் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான மாதிரி தாள் CBSE வாரிய இணையதளத்தில் cbse.gov.in இல் கிடைக்கிறது.

TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்

தேர்வர்கள் மாதிரி தாள்களை பதிவிறக்கம் செய்து, அதைப் பார்த்து பயிற்சி செய்யலாம். போர்டு தேர்வுக்கான தேதி தாள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் பொதுவாக ஒரு மாதத்திற்கு நடத்தப்படும்.

பிப்ரவரி நடுப்பகுதியில் தேர்வுகள் தொடங்கினால், அது மார்ச் நடுவில் அல்லது மார்ச் இறுதிக்குள் முடிந்துவிடும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது 10 ஆம் வகுப்பு 2023 ஆம் ஆண்டுக்கான CBSE தேர்வு அட்டவணையை வெளியிடத் தயாராக உள்ளது  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

click me!