CBSE CTET 2022 : சிபிஎஸ்இ சிடெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம்

By Raghupati RFirst Published Dec 28, 2022, 6:45 PM IST
Highlights

சிபிஎஸ்இ சிடெட் தேர்வு டிசம்பர் 28 மற்றும் 29, 2022 ஆகிய தேதிகளில் 74 நகரங்களில் 243 மையங்களில் இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் சிடெட் தேர்வு 2022 டிசம்பர் 28 அன்று தொடங்கி பிப்ரவரி 7 வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 28 மற்றும் 29, 2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிடெட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது வெளியிட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை

ஹால் டிக்கெட்டுகளை சிபிஎஸ்இயின் அதிகாரபூர்வ இணையதளமான ctet.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு சிடெட் தேர்வுக்கு மொத்தம் 32.45 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். சிடெட் தேர்வு டிசம்பர் 28 மற்றும் 29, 2022 ஆகிய தேதிகளில் 74 நகரங்களில் 243 மையங்களில் இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும்.

இந்த தேர்வை 2,59,013 தேர்வர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு டிசம்பர் 28, 29, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 23, 24, 25, 27, 28, 29, 30 ஜனவரி மற்றும், 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். , 2, 3, 4, 6, மற்றும் 7 பிப்ரவரி ஆகிய தேதிகளில் நடக்கும்.

ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி? :

*ctet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

*முகப்புப் பக்கத்தில், அனுமதி அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்.

*இணையத்தில் உள்ளே நுழைய வேண்டும்.

*பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்

click me!