CAT 2022 தேர்வு தேதி அறிவிப்பு.. தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி ? முழு தகவல்கள் இதோ !

By Raghupati RFirst Published Aug 2, 2022, 2:51 PM IST
Highlights

CAT 2022 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையானது நாளை தொடங்க உள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான iimcat.ac.in என்ற இணையத்தளத்தில் CAT 2022 க்கு விண்ணப்பிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்), பொது நுழைவுத் தேர்வை நவம்பர் 27, 2022 அன்று நடத்துகிறது. 

CAT 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA எடுத்திருக்க வேண்டும்.  SC/ ST/ PwD மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 45 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும். CAT ஆனது ஐஐஎம் கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மற்ற பிசினஸ் பள்ளிகளில் மேலாண்மை திட்டங்களில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூர், போத்கயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்தக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மௌர் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் முதுகலை மற்றும் திருச்சிராப்பள்ளி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் சக மேலாண்மை திட்டங்களில் சேர்க்கைக்கு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேவையான ஆவணங்கள் :

 - மின்னஞ்சல் முகவரி

- கைபேசி எண்

- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

- கையொப்பம்

- தனிப்பட்ட விவரங்கள்

- கல்வி விவரங்கள்

- பணி அனுபவ சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்)

- கட்டண விவரங்கள்


 

மேலும் செய்திகளுக்கு..MS Office தெரிந்தால் போதும்.. உங்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசு வேலை..!

CAT 2022 பதிவு தொடங்கும் தேதி : ஆகஸ்ட் 3, 2022 (10.00 am)

CAT 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 14, 2022  (05.00 pm)

CAT 2022 அட்மிட் கார்டு பதிவிறக்கம் தொடங்கும் தேதி : அக்டோபர் 27, 2022

CAT 2022 அட்மிட் கார்டு பதிவிறக்கத்திற்கான கடைசி தேதி : நவம்பர் 27, 2022

CAT 2022 தேர்வு தேதி : நவம்பர் 27, 2022

CAT 2022 முடிவு தேதி : ஜனவரி, இரண்டாம் வாரம் (மாறுபடலாம்).

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

click me!