மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. முழு விவரம் இதோ.

By Ramya s  |  First Published Nov 11, 2023, 11:24 AM IST

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Bharat Heavy Electricals Limited ) Supervisor Trainee ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு  அக்டோபர் 21, 2023 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 25-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மூலம் மேற்பார்வையாளர் பயிற்ச்சியாளர் பதவிக்கு, மூன்று வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 65 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி

Tap to resize

Latest Videos

undefined

Supervisor Trainee (சிவில்): சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ.
Supervisor Trainee (மெக்கானிக்கல்): மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ.
Supervisor Trainee (HR): MBA (முதுகலை வணிக நிர்வாகம்) அல்லது மனித வளத்தில் டிப்ளமோ (HR) ஆக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது  18 வயதுக்குக் கீழ் மற்றும் 27 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், மேலும் உச்ச வயது தளர்வு இருக்கும்.

தேர்வு முறை :

Supervisor Trainee பதவிக்கான தேர்வு செயல்முறை கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த தேர்வில் குறைந்தபட்சம் கட் ஆஃப் மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் .

சம்பளம் : இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.32,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் : இந்த பணிக்கு விண்ணப்பிக்க ரூ.795 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிதற்கான தொடக்க தேதி : அக்டோபர் 25,2023

விண்ணப்பத்தை சமர்ப்பிதற்கான கடைசி தேதி : நவம்பர் 25, 2023

ஆன்லைன் எழுத்து தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்ட தேதி : டிசம்பர் 2023

BHEL Supervisor Trainee ஆட்சேர்ப்பு 2023 க்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது?

  • BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • இணையதளத்தில் “Recruitment of Supervisor Trainee 2023” என்ற பகுதியைப் பார்க்கவும்.
  • "Click here to apply online" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலுக்கு அனுப்பப்படுவீர்கள். இங்கே, நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் பதிவு செய்ய வேண்டும் அல்லது உள்நுழைய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தேவையான உங்கள் அடிப்படை மற்றும் கல்வி விவரங்களை நிரப்பவும்.
  • உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

 

click me!