பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது காலி பணியிடங்களை நிரப்பவதற்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)
காலி பணியிடங்கள்:
மொத்த காலி பணியிடங்கள்: 3
பணியின் பெயர்: Mobile Application Developer, PHP Developer மற்றும் Digital Marketing (Executive)
விண்ணப்பிக்கும் தேதி:
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 21 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய முறைகளில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதல் www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும்
பின்னர், விண்ணப்பத்தினை முழுவதும் நன்கு படித்துவிட்டு, அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும் அல்லது குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:ரூ. 35,000 சம்பளத்தில் திருச்சி NIT யில் சூப்பர் வேலை.. பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். SC / ST / EWS / PH போன்றவர்கள் ரூ.450 விண்ணப்ப கட்டணமாக செலுத்தினால் போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
Mobile Application Developer மற்றும் PHP Developer பதவிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, IT, Software Engineering போன்ற பாடப்பிரிவில் BE, B.Tech, Bachelor’s Degree, MCA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே போல் Digital Marketing (Executive) பணிக்கு IT பாடப்பிரிவில் BE, B.Tech, BCA, MCA, MBA படித்திருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Mobile Application Developer, PHP Developer பணிகளுக்கு மாதம் ரூ.60,000 சம்பளமாக வழங்கப்படும். Digital Marketing (Executive) பணிக்கு ரூ.37,500 மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:எஸ்எஸ்சி தேர்வர்களே அலர்ட்.. SI, JE, Stenographer பணியிடங்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா..?