திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் District Resource Person, திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு என்ற தற்காலிகப் பணியிடத்திற்கு இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் உள்ள நிலையில் இந்த பணி முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் அல்லது முன்னிரிமை ஏதும் கோர இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Socialogy, Social Work, Social Work Management போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்று 6 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன் சுய உதவிக் குழுக்கள் திட்டத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு பணிகளில் குறைந்தது 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கொரோனா பரவல் அதிகரிப்பு; முகக்கவசம் அணிவது கட்டாயம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
விருப்பம் உள்ளவர்கள் tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் இணை வழியில் மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். நேரடியாக கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழுமை பெறாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் 31.03.2023 காலை 11 மணி முதல் 10.04.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவேற்றலாம். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.