சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் 108 பயிற்சிப் பணி காலிப் பணியிடங்கள் உள்ளன. எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் பட்டதாரிகளுக்கும், டிப்ளமோ முடித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு பிரிவிகளில் பட்டதாரி பயிற்சிப் பணியாளர் (Graduate Apprentices) பணிக்கு 76 காலியிடங்கள் உள்ளன. இதில் சிவில், மெக்கானிக்கில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவுகளில் பொறியியல் படிப்பைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சிப் பணிக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 9,000 வழங்கப்படும்.
தொழில்நுட்ப உதவி பயிற்சிப் பணியாளர் (Technician Apprentice) பணிக்கு டிப்ளமோ படித்த 32 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கு சிவில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சிப் பணிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 8,000 வழங்கப்படும்.
31.10.2022 அன்று 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்தப் பயிற்சி பணிகளுக்கு எழுத்துத் தேர்வு இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் விவரம் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பை டவுன்லோட் செய்து பார்க்கலாம்.
http://boat-srp.com/wp-content/uploads/2023/03/CMW_Notification_2023_24.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2023