ராணுவ தளவாட மையத்தில் 723 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபயர்மேன், டிரேட்ஸ்மேன், மெட்டீரியல்ஸ் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
ராணுவ தளவாட மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மையத்தில் உள்ள 723 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கான விண்ணப்பச் செயல்முறை டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் AOC ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொடக்கத்தில் ரூ.18,000 முதல் ரூ.19,900/ வரை சம்பளம் கிடைக்கும்.
மத்திய அரசு வேலை; கைநிறைய சம்பளம்; டிகிரி போதும்.; உடனே விண்ணப்பீங்க!
ஃபயர்மேன் மற்றும் டிரேட்ஸ்மேன், மெட்டீரியல்ஸ் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட், சிவில் மோட்டார் டிரைவர், டெலி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களுக்கு 723 காலியிடங்கள் உள்ளன.
பொருள் உதவியாளர் (MA) : 19 காலியிடங்கள்
இளைய அலுவலக உதவியாளர் (JOA) : 27 காலியிடங்கள்
சிவில் மோட்டார் டிரைவர் (OG) : 04
டெலி ஆபரேட்டர் தரம்-II " 14
தீயணைப்பு வீரர் : 247
கார்பெண்டர் & ஜாய்னர் : 07
ஓவியம் மற்றும் அலங்கரிப்பாளர் : 05
MTS (மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்) : 11
டிரேட்ஸ்மேன் மேட் : 389
மொத்தம் 723 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
undefined
டிரேட்ஸ்மேன் மேட் மற்றும் ஃபயர்மேன் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம்/டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மெட்டீரியல் அசிஸ்டெண்ட் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது சம்மந்தபப்ட்ட பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
மெட்டீரியல் அசிஸ்டெண்ட் - ரூ. 29,200 முதல் ரூ. 92,300 வரை
இளநிலை அலுவலக உதவியாளர் - ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை
சிவில் மோட்டார் டிரைவர் - ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை
டெலி ஆபரேட்டர் தரம் - ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை
ஃபயர்மேன் - ரூ. 19,900 முதல் ரூ. 63,200
கார்பெண்டர் & ஜாய்னர் - ரூ. 19,900 முதல் ரூ. 63,200
பெயிண்டர் & டெக்கரேட்டர் - ரூ. 19,900 முதல் ரூ. 63,200
MTS - ரூ. 18,000 முதல் ரூ. 56,900
டிரேட்ஸ்மேன் - ரூ. 18,000 முதல் ரூ. 56,900
ரூ.1,80,000 வரை சம்பளம்! NHPC நிறுவனத்தில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு
உடல் பரிசோதனை
இறுதி தகுதி
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் AOC ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.