ரூ. 43,000 சம்பளத்தில் மதுரை ஆவினில் வேலை.. கல்வித்தகுதி என்ன? முழு விவரம் இதோ..

By Ramya s  |  First Published Dec 18, 2023, 10:32 AM IST

மதுரை ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


1967 முதல் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மதுரையில் 713 பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 2,30,000 பால் உற்பதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மதுரை ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு மொத்தம் 1 காலியிடம் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் எந்த விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கல்வித்தகுதி : BVsc பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

பணியிடம் : மதுரை 

வயது வரம்பு “ 50 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காலியிடம் : 1

சம்பளம் மாதம் ரூ.43,000

வரும் ஜனவரி 10, 2024 நடைபெற உள்ள நேர்காணலில் கார்/பைக் ஓட்டுநர் உரிமத்துடன் கால்நடை மருத்துவம் & கால்நடை வளர்ப்பில் இளங்கலைப் பட்டம் ஆகிய சான்றுகளுடன் பங்கேற்ககலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடம் நிரப்பப்படும். இந்த பணியின் காலம் ஓராண்டு ஆகும்.

8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை.. முழு விவரம் இதோ..

நேர்காணல் நடைபெறும் இடம் : பொது மேலாளர், மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்,
மதுரை-625020.

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்

click me!