TNPSC : ஜனவரி 12ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்.. போட்டித்தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!!

By Raghupati RFirst Published Dec 16, 2023, 8:32 PM IST
Highlights

5446 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 முதன்மை தேர்வு முடிவு ஜனவரி 12 வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு துறை வாரியாக ஆட்களை தேர்வு செய்கிறது. பணி நிரந்தரம், நல்ல சம்பளம் போன்ற காரணங்களால் அரசு பணியில் சேர பல லட்சம் இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்களை தேர்வு செய்வதில் சுணக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2 ஏ தேர்வு என எந்த தேர்வாக இருந்தாலும் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகியவற்றில் வரும் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது.

இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், முடிவு வெளியிடப்படாமலேயே இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023 ஆம் ஆண்டில் 15.03.2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளயிடப்பட்டது. தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 இலட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர்.

தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.

தொகுதி.II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும், ஒரேநேரத்தில்மதிப்பீடுசெய்யவேண்டியதேர்வுகள்மற்றும்பிறதேர்வுகள்நடத்த வேண்டியிருந்ததாலும், தொகுதி-11 முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023 இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவனை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி- II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12- ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

click me!