தமிழகத்தில் அரசு பணிகளில் காலி பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பும் வேலையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு தேதி குறித்து அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பணிகளில் காலி பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பும் வேலையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதியன்று தேர்வு நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட எழுதி இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 9 மாதங்களாகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
undefined
இதுதொடர்பாக கடந்த மாத விளக்கமளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு;- 80 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மாதத்தில் 15 கடந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருவதால் தேர்வாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அன்புமணி, ராமதாஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் டிஎஸ்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவு தேதி குறித்து அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.