சென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? முழு விவரம் உள்ளே.

By Ramya s  |  First Published Dec 13, 2023, 10:37 AM IST

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் (HVF) உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


சென்னையில் அமைந்துள்ள ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் (HVF) உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்டதாரி மற்றும் டிப்ளமோ தொழில் பழகுனர் (Apprentice) பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் மொத்தம் 320 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் 

Tap to resize

Latest Videos

undefined

ஆணையத்தின் பெயர் : கனரக வாகன தொழிற்சாலை
பதவியின் பெயர் : பட்டதாரி & டிப்ளமோ தொழில் பழகுனர்
காலியிடங்களின் எண்ணிக்கை 320
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 16 டிசம்பர் 2023 
பயிற்சியின் காலம் : ஒரு வருடம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பணியிடங்கள் பற்றிய விவரங்கள் :

பட்டதாரி தொழிற்பழகுநர் பணிக்கு 110 காலியிடங்களும், பட்டய படிப்பு தொழிற்பழகுனர் பணிக்கு 110 காலியிடமும், பொறியியல் சாராத தொழிற்பழகுநர் பணிக்கு 100 காலியிடமும் என மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

HVF Avadi அதிகாரப்பூர்வ இணையதளம் https://ddpdoo.gov.in/வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறார்களா என்பதை சரிபார்க்க வேண்டும். 

கல்வி தகுதி :

சம்மந்தப்பட்ட துறையில் பட்டம்/ டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அந்தந்த பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் உத்தேச இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் அறிவிப்புகளைப் பெறுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை ஆவடியில் உள்ள HVF இல் சான்றிதழ் சரிபார்ப்பு அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு.. முழு விவரம் இதோ..

பட்டதாரி அப்ரண்டிஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 9,000 உதவித்தொகையும் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.8000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பதற்கான நேரடி ஆன்லைன் லிங்க்

click me!