சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் அறிவிப்பு; 10, 12ஆம் வகுப்புகளுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு

By SG Balan  |  First Published Dec 12, 2023, 9:12 PM IST

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ (CBSE) தேர்வுகள் முன்கூட்டியே தீர்மானித்தபடி, பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளன.


சிபிஎஸ்இ (CBSE) எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் 2024ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணைகளை வெளியாகி உள்ளது. முன்கூட்டியே அறிவித்தபடி, இரண்டு தேர்வுகளும் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளன.

கடந்த கல்வி ஆண்டிலும் டிசம்பரில் சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியானது. தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கின. 10ஆம் வகுப்புக்கு கடைசி தேர்வு மார்ச் 21 ஆம் தேதியும், 12ஆம் வகுப்புக்கு கடைசி தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதியும் நடந்து முடிந்தன. எல்லா தேர்வுகளும் ஒரே ஷிப்டில் காலை 10:30 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 1:30 மணி வரை நடைபெற்றன.

Latest Videos

undefined

இந்த கல்வி ஆண்டிலும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வுகள் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும். 55 நாட்களுக்குத் தொடரும் தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் முடிந்துவிடும்.

வெள்ளத்தால் இழந்த சான்றிதழை பெற வேண்டுமா? கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு..!

cbse.nic.in அல்லது cbse.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தேர்வு அட்டவணையை டவுன்லோட் செய்யலாம். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அட்டவணை தனித்தியாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

சிபிஎஸ்இ செய்முறை தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. செயல்முறை தேர்வுகள் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கும். அதற்கு ஆயத்தமாக மாணவர்கள் உள் மதிப்பீடுகள், திட்டங்கள் போன்றவற்றை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT ஷோ எது? டாப் டென் பட்டியல் இதோ!

click me!