கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறநிலையத்துறையின் கீழ இயங்கி வரும் ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த கோயில்களின் கீழ் கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறநிலையத்துறையின் கீழ இயங்கி வரும் ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த கல்லூரியில் உதவிப்பேராசிரியர், தட்டச்சர், ஸ்டோர் கீப்பர், ஆபிஸ் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உதவி பேராசிரியர் காலியிடங்கள் :
விலங்கியல் – 1
மலையாளம் – 1
கணிதம் – 2
தாவரவியல் 2
காலியாக உள்ள 5 உதவிபேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறிப்பிட்ட பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தட்டசர் – லேப் அசிஸ்டெண்ட் :
தட்டச்சர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சில் ஹையர் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் லேப் அசிஸ்டெண்ட் பணிக்கு 3 காலியிடம் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
டிகிரி முடித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை! 995 காலி பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க!
இவை தவிர ஸ்டோர் கீப்பர் பணிக்கு 1 காலியிடம், பதிவறை எழுத்தர் பணிக்கு 2 காலியிடங்கள், லைப்ரரி அசிஸ்டெண்ட் பதவிக்கு 1 காலியிடம், ஆபிஸ் அசிஸ்டெண்ட் பதவிக்கு 2 காலியிங்கள் என மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஸ்டோர் கீப்பர், பதிவறை எழுத்தர் லைப்ரரி அசிஸ்டெண்ட் போன்ற பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆபிஸ் அசிஸ்டெண்ட் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.sdkwc.org.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய விவரங்களுடன் பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “ செயலர், ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, குழித்துரை – 629163 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : ஜனவரி 4, 2023
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்