டிகிரி முடித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை! 995 காலி பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க!

By SG Balan  |  First Published Dec 8, 2023, 12:38 AM IST

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த உளவுத்துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்திய உளவுத்துறை பணியகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இந்த வேலைக்கு பட்டப்படிப்பை படித்தவர்கள் முயற்சி செய்யலாம்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE – II/EXECUTIVE) 995 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த உளவுத்துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

விமானப்படையில் அருமையான வேலை வாய்ப்பு.. 317 பணியிடங்கள்.. ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்..!

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்புக்கு விணப்பிக்கும் நபர்கள் 15.12.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பினும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்வு தளர்வு உண்டு.

சம்பளம்:

உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் பணியில் சேரும் நபர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.44,900 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.1,42,400 வரை மாதச் சம்பளம் கிடைக்கக்கூடும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்படும். தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/86382/Index.html என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.100 தேர்வுக் கட்டணமும், ரூ.450 விண்ணப்பக் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2023

இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1111108480114278664024.pdf

இந்திய விமானப்படையில் வேலை.. ரூ. 1.7 லட்சம் வரை சம்பளம்.. அருமையான வேலைவாய்ப்பு.!!

click me!