இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்பம் உள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு AFCATக்கான 2ம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும்.
இந்திய விமானப்படையில் காலியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ள இரு பாலர்களிடம் இருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்பம் உள்ளவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு AFCATக்கான 2ம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். மொத்தம் 317 இடங்கள் காலி பணியிடங்கள் உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
பணியிடங்களின் விவரம்;-
AFCAT Entry
காலியிடங்களின் எண்ணிக்கை: 317
பிளையிங் – 38 (ஆண்கள் - 28, பெண்கள் - 10)
கிரவுண்ட் டியூட்டி (Technical) – 165 (ஆண்கள் - 149, பெண்கள் - 16)
கிரவுண்ட் டியூட்டி (Non-Technical) – 114 (ஆண்கள் - 98, பெண்கள் - 16)
வயது வரம்பு:
பிளையிங் பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.
கிரவுண்ட் டியூட்டி (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு https://careerindianairforce.cdac.in or https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.12.2023