சென்னை விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி படிச்சிருந்தா போதும்! உடனே அப்ளை பண்ணுங்க!

Published : Nov 21, 2023, 07:15 PM ISTUpdated : Nov 21, 2023, 08:10 PM IST
சென்னை விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி படிச்சிருந்தா போதும்! உடனே அப்ளை பண்ணுங்க!

சுருக்கம்

மொத்தம் 906 காலிப் பணியிடங்கள் நிரப்ப இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்தள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் டிசம்பர் 8ஆம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் செக்யூரிட்டி ஸ்கீரினர் (Security Screener) காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையம் உள்பட பல விமான நிலையங்களில் பணிபுரிய ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

மொத்தம் 906 காலிப் பணியிடங்கள் நிரப்ப இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்தள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் டிசம்பர் 8ஆம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கும் அனைவரும் இந்த விமான நிலைய வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யலாம்.

தமிழ் தெரிந்தால் போதும்! கை நிறைய சம்பளத்துடன் அரசு வேலை! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

வயது வரம்பு: இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.11.2023 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இதேபோல OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு நீட்டிப்பு உண்டு.

ஊதியம்:

முதல் ஆண்டில் மாதம் ரூ. 30,000 மாதச் சம்பளம் கிடைக்கும். இரண்டாம் ஆண்டு  ரூ. 32,000 ஆகவும் மூன்றாம் ஆண்டு  ரூ.34,000 ஆகவும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை:

நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  https://aaiclas.aero/careeruser/login என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரிக்குச் சென்று இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.12.2023

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

கட்டணம்:

பொதுப் பிரிவு, OBC மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 வசூலிக்கப்படும். SC/ST, PWD பிரிவினருக்கும் பெண்களுக்கும் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகப் பெறப்படும்.

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை ட்வுன்லோட் செய்யலாம்.

AAI Recruitment 2023 for Security Screener Notification

PREV
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!