சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த 'ஏ பிளஸ் பிளஸ்' தரம்.. குவியும் பாராட்டுக்கள்..!

By Raghupati RFirst Published Nov 21, 2023, 3:55 PM IST
Highlights

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் 'ஏ பிளஸ் பிளஸ்' தரத்தை வழங்கி உள்ளது.

இதுகுறித்து சத்யபாமா கல்வி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் மரியஜினா ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்யபாமா உயர்கல்வி நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவன வேந்தர் டாக்டர் ஜேப்பியாரால் திறன்வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் அறம் சார்ந்த ஆற்றல் வாய்ந்த மானுட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வால் உருவாக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC), நமது கல்வி நிறுவனத்துக்கு “A++” தரத்தை வழங்கியுள்ளது 2023 ஆம் ஆண்டின் சாதனைகளில் ஒன்று. பல்கலைக்கழக மானியக் குழு, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விநிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வகை–1 இல் யூஜிசி ஒழுங்குமுறைச் சட்டம் 2018 (தரப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கும் பல்கலைக்கழக வகைப்படுத்துதல் ) உரிமையின்படி, தரம் உயர்த்தியுள்ள தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பின்னணியில், நமது உயர்கல்வி நிறுவனத்தின் அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துவதுதோடு, நமது எதிர்க்கால முயற்சிகளுக்கான உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும் எல்லையற்ற மற்றும் பயனுள்ள பங்களிப்பையும் இந்த தேசத்துக்கு வழங்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளது.

ரூ.490 கோடி சொத்து மதிப்பு.. இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்.. யார் தெரியுமா?

click me!