விமானப்படையில் சேர 6 லட்சத்து31 ஆயிரத்து 528 பேர் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி பத் திட்டத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்
மத்திய பாதுகாப்புத்துறை சார்பாக ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அக்னி பத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு பயிற்ச்சி அளிக்கப்படும் என்றும் 17 வயது முதல் 21 வயதுடையவர்கள் முப்படையில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாத ஊதியம் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அக்னி வீர் என்றழைக்கப்படும் வீரர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படையில் கீழ்நிலை ஊழியர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் அதில் இருந்து 25 % பேர் ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ரயில்களுக்கு தீ வைத்து எரிக்கும் சம்பவமும் அதிகரித்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் அக்னிபத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். பயிற்ச்சி முடிந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்னவாகும் என கேட்டிருந்தனர். மேலும் கல்வியறிவும் இளைஞர்களிடம் இல்லாத நிலை உருவாகும் என கூறியிருந்தனர்.
அரசுப்பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 பணியிடங்களுக்கு தேர்வு.. வெளியான முக்கிய தகவல்..
கவனத்திற்கு!! தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்.. முழு விபரம்
7.50 லட்சம் பேர் விண்ணப்பம்
இதனையடுத்து பல்வேறு தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் அக்னிபத் வீரர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். இதனையடுத்து முப்படைகளில் சேர்வதற்கான விண்ணங்களை பதிவு செய்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். அந்தவகையில், விமானப்படையில் விண்ணப்பிப்பதற்கான பதிவு கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்றுவரை விமானப்படையில் சேர ஆர்வம் காட்டிய இளைஞர்களின் விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய விமானப்படைக்கு (IAF) 7,49,899 அக்னிபாத் விண்ணப்பங்கள் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recruitment Scheme-க்கா -ஆல் நடைபெற ஆன்லைன் பதிவு முடிவடைந்தது. கடந்த கால விண்ணப்ப பதிவுடன் ஒப்பிடுகையில், இம்முறை 7,49,899 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அதிகபட்சமாக 6,31,528 விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படியுங்கள்
அக்னி பத் திட்டத்தின் கீழ் கடற்படையில் வேலை வாய்ப்பு..! எப்போது விண்ணப்பிக்க வேண்டும்..?