600 மின்னஞ்சல்கள்,80 போன் கால்...விட முயற்சியால் உலக வங்கியில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்

By Kanmani PFirst Published Sep 29, 2022, 3:29 PM IST
Highlights

1500 விண்ணப்பங்களை அனுப்பி இருந்தேன். 600க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 80-கும் ஏற்பட்ட அழைப்புகளை நான் செய்தேன். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன் என கூறியுள்ளார் அந்த இளைஞர். 

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனக் கூறுவார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் உலக வங்கியில் தனது விடாமுயற்சியின் காரணமாக வேலை வாங்கி உள்ளது மற்ற இளைஞர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரே Linkedin பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த வத்சல் நஹாடா என்ற இளைஞர் தனது இளநிலை பட்டத்தை டெல்லி ஸ்ரீராம் காமர்சிலும் பின்னர் அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். அவர் எவ்வாறு உலக வங்கியில் வேலை வாங்கினார் என்ற அனுபவத்தை தான் தற்போது பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் எனக்கு கையில் வேலை இல்லை. இன்னும் இரண்டு மாதங்களில் நான் பட்டதாரியாக போகிறேன். நான் யேல் பல்கலைக்கழில் மாணவன். எனக்கு ஒரு வேலை கூட கிடைக்காத போது யேலுக்கு வந்து படித்ததில் என்ன பயன் என்று எனக்குள்ளே தோன்றியது.

மேலும் செய்திகளுக்கு...அப்படிபோடு.. மருத்துவ கலந்தாய்வை போல புதிய நடைமுறையை கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழகம்.!

இந்தியாவில் உள்ள என் பெற்றோர்கள்  நான் எப்படி இருக்கிறேன் என கேட்டபோது நன்றாக இருக்கிறேன் என பொய் சொல்லவே மிகவும் கடினமாக இருந்தது. இந்தியாவுக்கு வேலை இல்லாமல் போகக்கூடாது என முடிவு செய்தேன். எனது முதல் சம்பளத்தை டாலரில் தான் பெறுவேன் என வைராக்கியத்துடன் இருந்தேன். எனக்கு தெரிந்த அனைவரையும் தொடர்பு கொண்டு வேலைக்காக பேசினேன். வேறு வேலை வாய்ப்பு தளங்களையோ, சில வகையிலான விண்ணப்பங்களையோ  நான் முற்றிலும் தவிர்த்தேன்.அது கொஞ்சம் அபாயகரமானது தான். இருப்பினும் அதை நான் செய்தேன். 

படிப்பு நிறைவு பெற இருந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1500 விண்ணப்பங்களை அனுப்பி இருந்தேன். 600க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 80-கும் ஏற்பட்ட அழைப்புகளை நான் செய்தேன். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன் பல கதவுகளை தட்டியதன் காரணமாக சில பாதைகள் திறந்தன. 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் எனது கையில் நான்கு வேலைகள் இருந்தன. அதில் ஒன்றுதான் இந்த உலகம் வங்கி வேலை.

இதையும் படிங்க;- தேர்வர்களே அல்ர்ட் !! தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ரத்து.. மாற்று தேதியை அறிவித்த என்டிஏ

உலக வங்கியில் தற்போதைய ஆராய்ச்சி இயக்குனருடன் உடன் இணை ஆசிரியராக ஒரு வேலை கிடைத்துள்ளது. அதை நான் முன்னதாக கேள்விப்பட்டது கூட கிடையாது.  இந்தியாவை சேர்ந்த இளைஞர் தனது வாழ்க்கையில் பல கட்டங்களாக போராடி விடாமுயற்சியின் காரணமாக உலக வங்கியில் வேலை பெற்று இருப்பது குறித்த பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.

click me!