எஸ்பிஐ வங்கியின் காலியாக உள்ள சோதனை அதிகாரி ( Probationary Officer) பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எஸ்பிஐ வங்கியின் காலியாக உள்ள சோதனை அதிகாரி ( Probationary Officer) பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் படிக்க:சென்னையில் இந்த தேதியன்று 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்... அறிவித்தது குடிநீர் வழங்கல் வாரியம்!!
வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in/careers அல்லது ibpsonline.ibps.in. ஆகியவற்றின் மூலம் அக்டோபர் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தற்போது காலியாக 1,673 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது வரம்பு 21 -30 க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதாவது பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பிற்குட்பட்டு தற்போது இறுதியாண்டு ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது அல்லது டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தேர்ச்சி சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்,டி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:TSPSC அறிவித்த புதிய வேலைவாய்ப்பு 2022.. தேர்வு எப்போது? எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்..
முதல் நிலை, முதன்மை மற்றும் திறனறிவு ஆகிய மூன்று கட்ட தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதியானவர்கள். முதன்மை மற்றும் திறனறிவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிபடையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.