2,222 காலிப்பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு.. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

By Ramya s  |  First Published Nov 28, 2023, 1:33 PM IST

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான விண்ணப்ப தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான விண்ணப்ப தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக ஆசிரிய தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது.

2222 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்த தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Latest Videos

undefined

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் இணைய வழியாக விண்ணப்பம் பதிவேற்ற விண்ணப்பதாரர்கள் கூடுதல் அவகாசம் கோரியிருந்தனர். இதையொட்டி விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி டிசம்பர் 7-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.  

படித்தவுடன் வேலை கிடைக்க வேண்டுமா.? ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவக்கூடிய 7 வழிகள்

அதே போல ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் திருத்தம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரம் விண்ணப்பதாரர்கள் தங்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மாற்ற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!