15,000 காலிப் பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாவது எப்போது?

By SG Balan  |  First Published Nov 25, 2023, 6:25 PM IST

பணி நியமனத்தை விரைவுபடுத்த குரூப்-2, குருப்-2ஏ, குரூப்-4 பிரிவுகளில் காலிப் பணியிடங்களை நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.


தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்காக 30 போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விஏஓ, வருவாய் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் என எல்லா துறைகளிலும் காலி பணியிடங்கள் இருக்கின்றன.

Latest Videos

undefined

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆண்டுகளில் 55,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? நெட்பிளிக்ஸ் உங்களுக்கு ப்ரீ தான்... மிஸ் பண்ணாதீங்க...

2023-24ஆம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த தகவலை அளிக்க அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. பணி நியமனத்தை விரைவுபடுத்த குரூப்-2, குருப்-2ஏ, குரூப்-4 பிரிவுகளில் காலிப் பணியிடங்களை நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் 15,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அதிக காலிப் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!