சென்னை NIRT-ல் வேலை.. 10 படித்தால் போதுமாம் ...கைநிறைய சம்பளம் வாங்கலாம்... மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Kalai Selvi  |  First Published Nov 25, 2023, 11:24 AM IST

சென்னையில் ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் NIRT-ல் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முழு விபரங்கள் இதோ..


ஐசிஎம்ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council Of Medical Research or ICMR) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கவுன்சிலின் கீழ் தான், என்ஐஆர்டி எனும் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute for Research in Tuberculsis) இயங்குகிறது. தற்போது இங்கு காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை 
நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்போது அதுகுறித்த விபரங்களை இங்கு பார்க்கலாம்.

பதவியின் பெயர் :  ப்ராஜெக்ட் டெக்னீக்கல் சப்போர்ட் I (Health Assistants)

Tap to resize

Latest Videos

undefined

பதவியின் மொத்த எண்ணிக்கை :

கல்வி தகுதி : 10, டிப்ளேமா பிரிவில் (எம்எல்டி/டிஎம்எல்டி/ஐடிஐ) படிப்புகளை முடித்து இருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

மாதசம்பளம் : 18,000

வயது வரம்பு : 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விண்ணப்பிப்பது எப்படி : 

விண்ணப்பதாரர்கள், www.nirt.res.in அல்லது www.icmr.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். பின்னர் மெனு பட்டியில் தொழில்/சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும். அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும். இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். பின் நீங்கள் விண்ணப்பம் செய்த படிவத்தை, பதிவிறக்கம் செய்து டிசம்பர் 7ஆம் தேதி தேதி எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் நடைபெறும் இடத்துக்கு கையோடு எடுத்து செல்ல மறக்காதீர்கள்.

இதையும் படிங்க: எந்த டிகிரி படிச்சிருந்தாலும் ஓகே! ஸ்டேட் வங்கி வேலை கொடுக்க ரெடியா இருக்கு... உடனே அப்ளை பண்ணுங்க!

இதனுடன் உங்கள், கல்வி சான்று, வயது, சாதி சான்று, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றின் நகல் சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் வைத்து கொண்டு ICMR-National institute For Researh In Tuberculosis, No.1.Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai 600 031 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: ரூ.40,000 வரை சம்பளம்..10, 12, ஐடிஐ படித்தால் போதும்..நாமக்கல் சுகாதாரத்துறையில் வேலை..!

முக்கிய அறிவிப்பு என்னவென்றால், இது ஒரு தற்காலிக பணி ஆகும். தற்போத தேர்வாகும் நபர்கள் 4 மாதம் வரை மட்டுமே பணியமர்த்தப்பவார்கள்.

click me!