
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 8,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் சேவை / விற்பனை பிரிவுகளில் கிளார்க் / ஜூனியர் அசோசியேட் பணிகளுக்கு 8283 காலியிடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் அசோசியேட் பணிக்கு விண்ணபிக்க ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதும். சென்னை மற்றும் புதுச்சேரியில் மட்டும் 175 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு:
இந்த வேலைக்கு விண்ணபிக்கும் நபர்களின் வயது 20-28 க்குள் இருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியினப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. பிற்ப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்:
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் பணி நியமனம் பெறுபவர்களுக்கு ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை மாத ஊதியம் வழங்கப்பபடும்.
தேர்வு முறை:
இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு இரண்டுமே ஆன்லைனிலேயே நடைபெறும். 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ஆன்லைனில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி / எஸ்டி/ மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பொது / பிற்படுத்தப்பட்ட / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750.
இடஒதுக்கீடுக்கு உரிய பிரிவினருக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது. இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பினால் அதை விண்ணப்பப் படிவத்தில் அதனைக் குறிப்பிடலாம்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 07-12-2023
இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் விவரங்கள் அறிய https://bank.sbi/web/careers/current-openings என்ற அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D