ரூ.40,000 வரை சம்பளம்..10, 12, ஐடிஐ படித்தால் போதும்..நாமக்கல் சுகாதாரத்துறையில் வேலை..!

By Kalai Selvi  |  First Published Nov 23, 2023, 11:40 AM IST

நாமக்கல் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 27 காலியிடங்கள் தான் இந்த வேலைக்கு இருக்கிறது. 10, 12 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!


நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் இருக்கும் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தமாக 27 காலியிடங்கள் தான் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 27.11.2023 குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு ரூபாய் 10, 500 முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். இதுகுறித்த முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை.. 

விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பிக்கும் முன் கல்வித் தகுதி, வயது ஆகியவற்றை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து தெரிந்து கொண்டே பிறகே விண்ணப்பியுங்கள். 

Tap to resize

Latest Videos

undefined

District Quality Consultant:

இந்த பதவிக்கு 1 காலியிடம் தான் உள்ளது. இதற்கான கல்வி தகுதி Dental, AYUSH, Nursing,  Social Science, Hospital Administration, Public Health, Health Management கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.40,000 வழங்கப்படும்.

Dental Surgeon:

இந்த பதவிக்கு 2 காலியிடங்கள்  உள்ளது. இதற்கான கல்வி தகுதி BDS கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.34,000 வழங்கப்படும்.

இதையும் படிங்க:   மொத்தம் 5,280 காலியிடங்கள்.. ரூ.36,000 சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை.. முழு விவரம் இதோ..

Refrigeration Mechanics (Immunisation):

இந்த பதவிக்கு 1 காலியிடம் தான்  உள்ளது. இதற்கான கல்வி தகுதி Refrigeration Mechanic & Air Conditioning பிரிவில் ஐ.டி.ஐ கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும்.

இதையும் படிங்க:  சென்னை விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி படிச்சிருந்தா போதும்! உடனே அப்ளை பண்ணுங்க!

Midlevel Health Provider:

இந்த பதவிக்கு 4 காலியிடங்கள்  உள்ளது. இதற்கான கல்வி தகுதி Diploma in GNM or B.Sc Nursing கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

RBSK Pharmacist:

இந்த பதவிக்கு 1 காலியிடம் தான்  உள்ளது. இதற்கான கல்வி தகுதி Diploma in Pharmacy கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும்.

Health Inspector Grade II: 

இந்த பதவிக்கு 7 காலியிடங்கள்  உள்ளது. இதற்கான கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு மற்றும் Multipurpose Health Worker, Health Inspector, Sanitary Inspector Course கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.14,000 வழங்கப்படும்.

ANM UPHC:

இந்த பதவிக்கு 4 காலியிடங்கள்  உள்ளது. இதற்கான கல்வி தகுதி Auxiliary Nurse Midwife/ Multipurpose Health Worker course கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.14,000 வழங்கப்படும்.

Dental Assistant:

இந்த பதவிக்கு 4 காலியிடங்கள்  உள்ளது. இதற்கான கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 2 வருட Dental surgeon பணி அனுபவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சம்பளம் ரூ.13,800 வழங்கப்படும்.

Data Entry Operator:

இந்த பதவிக்கு 1 காலியிடம் தான் உள்ளது. இதற்கான கல்வி தகுதி 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க கண்டிப்பாகப் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.13,500 வழங்கப்படும்.

Programme cum Administrative Assistant:

இந்த பதவிக்கு 1 காலியிடம் தான் உள்ளது. இதற்கான கல்வி தகுதி இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க கண்டிப்பாகப் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும்.

Tribal Welfare Counselor:

இந்த பதவிக்கு 1 காலியிடம் தான் உள்ளது. இதற்கான கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.10,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரு முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:  துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்/ நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் - 637003

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய,  https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2023/11/2023110958.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.

click me!