மொத்தம் 5,280 காலியிடங்கள்.. ரூ.36,000 சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை.. முழு விவரம் இதோ..

By Ramya sFirst Published Nov 22, 2023, 11:54 AM IST
Highlights

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 5280 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வபோது தனது வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வட்டம் சார்ந்த அதிகாரிகள் (circle-based officers - CBO) ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை நவம்பர் 22 அதாவது இன்று முதல் தொடங்கி உள்ளது., விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 12 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு ஜனவரி 2024 இல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் மூலம் மொத்தம் 5280 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எஸ்பிஐ வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்

பதவி: வட்ட அடிப்படையிலான அதிகாரிகள்
காலியிடங்கள்: 5280
முக்கியமான பதிவு தேதிகள்: நவம்பர் 22, 2023 முதல் டிசம்பர் 12, 2023 வரை
விண்ணப்ப முறை: ஆன்லைன்
சம்பளம்: ரூ. 36,000
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.sbi.co.in

தகுதி: ஒரு விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் (IDD) உட்பட மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், பட்டயக் கணக்காளர் மற்றும் செலவுக் கணக்காளர் போன்ற படிப்பை பயின்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அக்டோபர் 31 அன்று 21 வயதுக்கு குறைவாகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹750.

SC/ ST/ PwBD வகை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு, திரையிடல் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எஸ்பிஐ வங்கியில் 8,424 காலிப்பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ..

ஆன்லைன் தேர்வில் 120 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் தேர்வும், 50 மதிப்பெண்களுக்கான விளக்கத் தேர்வும் இருக்கும். அப்ஜெக்டிவ் தேர்வு முடிந்த உடனேயே விளக்கத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விளக்கத் தேர்வுக்கான விடைகளை கணினியில் டைப் செய்ய வேண்டும்.

அப்ஜெக்டிவ் தேர்வின் காலம் 2 மணிநேரம் மற்றும் மொத்தம் 120 மதிப்பெண்கள் கொண்ட 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி நேரம் இருக்கும். விளக்கத் தேர்வின் காலம் 30 நிமிடங்கள். இது ஆங்கில மொழி தேர்வு (கடிதம் எழுதுதல் மற்றும் கட்டுரை) மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.

click me!