2024 டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு! 19 வகையான தேர்வுகளுக்கான தேதிகள் எப்போது?

By SG Balan  |  First Published Dec 20, 2023, 7:00 PM IST

2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. மொத்தம் 19 வகையான தேர்வுகள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. குரூப் 1 முதல் குரூப் 8 வரையான பிரிவுகளிலும் இதர பணிகளுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசுக்குச் நிறுவனங்களிலும் டி.என்.பி.எஸ்.சி ஆள்சேர்ப்பு பணியை மேற்கொள்கிறது.

Latest Videos

undefined

இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. மொத்தம் 19 வகையான தேர்வுகள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு அட்டவணை வெளியீடு!

இதன் மூலம் குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024 ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் தேர்வு ஜூன் மாதம் நடந்தப்படும் என்றும் தெரிகிறது. குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு 1294 பணியிடங்களுக்கு நடத்தப்படும்.  குரூப் 1 தேர்வு அறிவிப்பும் மார்ச் மாதம் வெளியாகும். ஜூலையில் தேர்வு நடைபெறும். இத்தேர்வு மூலம் 65 குரூப் 1 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 1264 வனக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.

இவை தவிர சட்டம், தொல்லியல், உடற்கல்வி, நூலகம், கணக்கியல் மற்றும் சிவில் நீதிபதி தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

'நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

click me!