யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு அட்டவணை வெளியீடு!

Published : Dec 19, 2023, 05:38 PM IST
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வு அட்டவணை வெளியீடு!

சுருக்கம்

நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணச் செலவுத் தொகை திருப்பிச் செலுத்தப்படும். இது இரண்டாவது / ஸ்லீப்பர் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மட்டுமே பொருந்தும்.

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையம் (UPSC) நடத்தும் 2023ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகளை விண்ணப்பதாரர்கள் upsc.gov.in என்ற யுபிஎஸ்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு 2023 இன் நேர்முகத் தேர்வு 2024 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 16ஆம் தேதி வரை நடைபெளற உள்ளது. மொத்தம் 1026 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். முற்பகல் அமர்வு காலை 9 மணிக்கும் பிற்பகல் அமர்வு மதியம் 1 மணிக்கும் ஆரம்பமாகும்.

நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணச் செலவுத் தொகை திருப்பிச் செலுத்தப்படும். இது இரண்டாவது / ஸ்லீப்பர் வகுப்பு ரயில் கட்டணத்திற்கு மட்டுமே பொருந்தும்.

யுபிஎஸ்சி (UPSC) மெயின் தேர்வு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15, 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. தேர்வு முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.

நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பைப் பதிவிறக்க:

UPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in க்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் UPSC சிவில் சர்வீசஸ் 2023 நேர்முகத் தேர்வு அட்டவணை என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

டவுன்லோட் செய்யப்படும் PDF கோப்பில் விண்ணப்பதாரர்கள் தேதிகளைச் சரிபார்க்கலாம்.

தேவைப்பட்டால் அட்டவணையை சேமித்து வைத்து, பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now