இந்தியாவின் புதிய கோடீஸ்வரர் ஆனார் தீபிந்தர் கோயல்.. யார் இவர்? அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

By Ramya s  |  First Published Jul 15, 2024, 4:46 PM IST

Zomato நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக மாறி உள்ளார்.


Zomato நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக மாறி உள்ளார். கடந்த ஆண்டில் Zomato பங்குகள் அசுர வளர்ச்சி அடைந்ததை அடுத்து அவர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஆன்லைன் உணவு விநியோக தளமான ஜொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் இன்று 4% அதிகரித்தன. இந்த எழுச்சி Zomato இன் சந்தை மதிப்பை ரூ. 1.9 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு ரூ. 8,000 கோடியை கடந்துள்ளது. இதனால் தனது 41 வயதில் இந்தியாவின் பணக்கார தொழில்முறை மேலாளராக தீபிந்த கோயல் மாறி உள்ளார். ஜொமேட்டோ நிறுவனத்தில் 4.24% பங்குககளை அவர் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 36.95 கோடி ஆகும்.

Latest Videos

undefined

லண்டன், சுவிஸ், துபாய்.. உலகின் ஆடம்பர, விலை உயர்ந்த வீடுகளை வைத்திருக்கும் இந்திய கோடீஸ்வரர்கள்..

சொமாட்டோவின் பங்கு விலை உயர்வுக்கு அந்நிறுவனத்தின் Blinkit டெலிவரி தளத்தின் வலுவான செயல்திறன் தான் காரணம் என்று கூறப்படுகிறது. Swiggy Instamart மற்றும் Zepto போன்ற போட்டியாளர்களை விட Blinkit சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மேலும் கணித்ததை விட முன்னதாகவே லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. Zomatoவின் உணவு விநியோக வணிகத்தின் லாபமும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

யார் இந்த தீபிந்த கோயல்?

தீபிந்தர் கோயல் பஞ்சாபின் முக்த்சரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். அவர் சண்டிகரில் உள்ள DAV கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் 2001 இல் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். 2005 இல், அவர் கணிதம் மற்றும் கணினியில் B.Tech பட்டம் பெற்றார்.

உங்கள் அம்மாவின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதன் மூலம் வரியைச் சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?

தீபிந்தர் தனது யோசனையால் இந்தியாவில் உணவு விநியோகப் பிரிவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். உணவகங்களில் உணவை ஆர்டர் செய்வதில் சக ஊழியர் சிரமப்படுவதை பார்த்த அவருக்கு ஆன்லைன் உணவு விநியோக தளம் தொடங்குவதற்கான யோசனை வந்துள்ளது. உணவகங்களைப் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஆன்லைன் உணவு விநியோக தளத்தின் அவசியத்தை உணர்ந்த அவர், 2008 இல் தனது சக ஊழியர் பங்கஜ் சத்தாவுடன் சேர்ந்து Foodiebay.com ஐ முதலில் தொடங்கினார். 2010 இல் Foodiebay.com Zomato.com என மறுபெயரிட்டது. விரைவில், ஜொமேட்டோ நிறுவனம் நாடு முழுவதும் பிரபலமானது. இந்த நிலையில் ஜோமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்ததன் மூலம் தீபிந்தர் கோயல் இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறி உள்ளார்.

click me!